துபாய்: ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்தாவது 10% அதிகரித்துள்ளது என்றும், அந்த சதவிகிதம் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 21ம் தேதி, இலங்கை தலைநகர் கொழும்புவில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர்.
இதனையடுத்து, பாதுகாப்பு நெருக்கடிகள் நிலவிவரும் இலங்கையில், ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்தாவது 10% அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
துபாயில் நடைபெற்ற ஒரு பயண மாநாட்டில் பேசிய ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் முதன்மை நிர்வாகி விபுலா குணதிலோகா இந்த தகவலைத் தெரிவித்தார்.