சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு  வரும் மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக உயர்நீதி மன்ற பதிவாளர் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து உயர்நீதி மன்ற பதிவாளர் விடுத்துள்ள அறிக்கையில், மே1ந்தேதி முதல் ஜூன் 2ந்தேதி 33 நாட்கள்  கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோடை விடுமுறையின்போது,  அவசர வழக்குகள் வாரந்தோறும், திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் என்றும், அந்த  வழக்குகள் மீது புதன், வியாழக்கிழமைகளில் விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, விடுமுறை காலத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் 16 நீதிபதிகளும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 12 நீதிபதிகளும் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.