சென்னை

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிவித்தபடி இன்று தமிழ் கவிஞர் நாள் கொண்டாடப்படவில்லை.

மறைந்த மாபெரும் கவிஞரான பாரதிதாசனின் பிறந்த நாள் ஏப்ரல் 29 ஆகும்.   மக்களால் புரட்சிக் கவிஞர் என போற்றப்படும் பாரதி தாசனுக்கு கட்சி வித்தியாசம் இன்றி அனைவரும் புகழ் மாலை சூட்டி வருவது வழக்கம்.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில் அவர் பரதிதாசன் 125 ஆம் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படும் எனவும் ஆண்டு தோறும் அவர் பிறந்தநாளானஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்க் கவிஞர் நாள் என கொண்டாடப்படும் எனவும் ஜெயலலிதா தெரிவித்தார்.

அம்மாவின் ஆட்சி என கூறிக் கொள்ளும் அதிமுக அரசு தமிழ்க் கவிஞர் நாள் கொண்டாட்டம் எதுவும் இன்று நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.