ணைய தேடுதள போட்டியில் இந்தியாவைப்போல சீனா இல்லை, ஏனெனில் இந்தியா மற்றும் உலக அளவில் பிரபலமாக பயன்படுத்தும் அனைத்து பயன்பாடுகளுக்கும் சீனா தனக்கென பிரத்யேகமான பயன்பாட்டை உருவாக்கிக்கொள்கிறது.

சீன தேடுதளமான பைடு பிரபல செல்பேசி செயலி Do Global  நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. Do Global  நிறுவனம் செல்பேசி செயலிகளில் தனக்கென பிரத்யோகமான சந்தையை வைத்திருக் கிறது. ஏறக்குறைய மாதத்திற்கு 25 கோடி பயனாளர்கள் இவர்களின் செயலிகளை பயன்படுத் கின்றனர் என்றால் இவர்களின் சந்தையை தெரிந்துகொள்ளலாம்.

இப்படிப்பட்ட பிரபலமான செயலியைத்தான் கூகிள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோர் சந்தையிலும், விளம்பரம் கொடுக்க உதவும் தளமான Admob லும் தடை செய்துள்ளது

என்ன காரணமென்று கொஞ்சம் விரிவாக பார்ப்போமா?

செல்பேசி செயலிகளில் விளம்பரம் வைத்து செயலிகளை உருவாக்கினால் விளம்பரம் மூலம் வருமானம் கிடைக்கும். இதனால் Free Ware , Freemium என்ற முறை செல்பேசி சந்தையில் மிக பிரபலம். செயலி நன்கு பிரபலமாகிவிட்டால் விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் நன்றாகவே இருக்கும் என்பதால் உலகம் முழுதும் பல லட்சக்கணக்கானோர் செயலிகளை இலவசமாக கொடுத்து விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டிவருகின்றனர்.

PreAMo செயலி

விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவது தனி என்றாலும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் கொஞ்சம் தானாக விளம்பரங்களை கிளிக் செய்தால் அதிக வருமானம் ஈட்டுவதற்கு தனியாக செயலிகளை உருவாக்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட செயலிதான் PreAMo. இதன் மூலம் செயலியில் உள்ள விளம்பரங்களை  தானாகவே கிளிக் செய்ய ஒரு தனி நிரலையே உருவாக்கிவிட்டனர்.

இப்போது இந்த செய்திக்கு வருவோம்.

Do Global நிறுவனம் 100க்கும் மேற்பட்ட செயலிகளை கூகிள் ப்ளேஸ் ஸ்டோரில் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் 6 செயலிகளில்  மேற்கண்ட   PreAMo மாதிரி விளம்பரங்களை தானாகவே கிளிக் செய்யும் நுட்பத்தினை கொண்டிருந்த காரணத்தில் அந்த நிறுவனத்தினை தன் சந்தையில் இருந்து நீக்கியதாக கூகிள் தெரிவிக்கிறது. ஆனால் அடுத்த ஒரு வாரத்திலயே மேற்கண்ட நிறுவனத்தின் 40 செயலிகளையும் கூகிள் தனது ப்ளே ஸ்டோர் சந்தையில் இருந்து நீக்கியுள்ளது
அதேபோல்  Do Global நிறுவனம் தங்களது Admob கணக்குகளையும் கூகிள் தடை செய்துவிட்டதாக கூறியுள்ளது.

இதுபோன்ற பல செயலிகளை இந்தியாவில் அதிகமாக நிறுவப்படுவதாக ஜப்பானைச் சேர்ந்த டிரெண்ட் மைக்ரோ நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்திய மக்களே, என்ன ஏதுன்னு தெரியாம எந்த செயலியையும் நிறுவாதீர்கள், தெரியலைன்னா நாலு பேர்ட்ட கேட்டுக்கூட தெரிஞ்சிக்கோங்க.

-செல்வமுரளி