கொழும்பு:

லங்கையில்  கடந்த 21ந்தேதி (ஈஸ்டர் பண்டிகை) தேவாலயங்களில் நடைபெற்ற  தொடர் குண் டுவெடிப்பு தாக்குதலையடுத்து தொடர்ந்து, இன்று முதல் முகத்தை மூடும் புர்கா உள்பட முகத்திரைகள் அணிய தடை விதித்து  இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அந்நாட்டு இஸ்லாமியர்கள் சிலர் உதவி புரிந்த நிலையில், இலங்கை அதிபர்  இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.  நாட்டு மக்களின் நன்மை கருதி இலங்கையில் புர்கா தடை செய்யப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை அரசு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளையும் பயன்படுத்துதற்கு உடனடியாக டை செய்யப்படுகிறது.  நிக்காப் முக திரைகள், மாஸ்குகள், புர்காக்கள் போன்றவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை வேரறுக்கவும், அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணவேண்டியது அவசியமாகும் என்றும் தெரி விக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, எந்தவொரு சமூகப் பிரிவையும் அசவுகரியத் துக்கு உள்ளாக்காத வகையில்,  அமைதியும் நல்லிணக்கமுமிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கோர வெடிகுண்டு தாக்குதல்களை தொடர்ந்து, தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளும் அவசரகால சட்டத்தின் கீழ் தடை செய்யப்படுவதாகவும்,  அந்த அமைப்புகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்படுவதாகவும்  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.