புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில் சுமார் 1.74 லட்சத்திற்கும் மேற்பட்ட ரயில் பயண திருட்டு புகார்கள் பதிவாகியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், ரயில் பயணங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள், ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் செய்யப்படவில்லை என தெரியவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சென்ற 10 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், கடந்த 2018ம் ஆண்டில்தான், அதிகபட்சமாக 36,584 புகார்கள் பதிவாகியுள்ளன.
2017ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 33,044
2016ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 22,106
2015ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 19,215
2014ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 14,301
2013ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 12,261
2012ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 9,292
2011ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 9,653
2010ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 7,549
2009ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 7,010
இத்தனை ஆண்டுகளுடைய திருட்டுப் புகார் எண்ணிக்கைகளைக் காணும்போது, ஒவ்வொரு ஆண்டிலும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதைக் காணலாம்.
இந்திய ரயில்வே தகுந்த மற்றும் போதிய நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ளுமா?
– மதுரை மாயாண்டி