டில்லி:

தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் செய்து வரும், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுத்து வருவதாக, காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளின் அனல் கக்கும்  பிரசாரம் நடைபெற்று வரும் வேளையில், இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் செய்து வருவதாக தேர்தல் கமிஷ னுக்கு ஏராளமான புகார்கள் பறந்துள்ளன. பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்பட முக்கிய தலைவர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே  தேர்தல் ஆணையம் நாட்டின், ராணுவ நடவடிக்கைகள், ராணுவத்தினர் புகைப்படங் கள், சீருடைகள் ஆகியவற்றை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்துக் கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இருந்தால், மோடி, அமித்ஷா போன்றோர் புல்வாமா தாக்குதல், பாலகோட் தாக்குதல், அபிநந்தன், விவகாரம், மிஷன் சக்தி போன்றவற்றை கூறி, மக்களிடையே வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் பலமுறை புகார் கூறி யும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில்,  மோடி, அமித்ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது: உச்சநீதி மன்றத்தில் காங்கிரஸ் முறையீடு செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஷ்மிதா தேவ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இது குறித்து அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.