க்னோ

ந்தி பேசும் மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் பள்ளி இறுதி தேர்வில் 5.74 லட்சம் மாணவர்கள் இந்தியில் தேர்ச்சி அடையாமல் உள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த பள்ளி இறுதி தேர்வில் 31,92,587 மாணவர்கள் தேர்வு எழுதினர்.   இவர்களில் 23,004 பேர் தனித் தேர்வர்கள் ஆவார்கள்.   இந்த தேர்வில் 22,73,304  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அவர்களில் 11,63,735 பேர் ஆண்கள். 11,09,569 பேர் பெண்கள்.

இந்த மாநில மாணவர்களின் தாய் மொழி இந்தி என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் அதிர்ச்சி ஊட்டும்படி இந்தியில் 5.74 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.     இதற்கு அடுத்தபடியாக கணிதத்தில் 5.02 லட்சம் பேரும் ஆங்கிலத்தில் 5.02 லட்சம் மாணவர்களும் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.

இது குறித்து பள்ளி தேர்வு ஆணையர் நீனா ஸ்ரீவத்சா, “இந்த வருடம் இந்தியில் அதிகமானோர் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.  மொத்தம் 29.50 லட்சம் பேர் இந்தி தேர்வை எழுதி உள்ளனர்.  அதில் 23.76 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.   இந்தியை தாய் மொழியாக கொண்ட போதிலும் 80.54% மாணவர்களே இந்தியில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்கு இந்தி தங்கள் தாய் மொழி என்பதால் மாணவர்கள் அதிக கவனம் செலுத்தாதே காரணமாக இருக்கலாம்.   மற்ற பாடங்களில் காட்டிய அக்கறையை இதில் அவர்கள் காட்டவில்லை.   தாய் மொழியாக இருந்தாலும் மாணவரகள் இந்தி பாடத்தையும் மற்ற பாடங்கள் போல கவனமாக படிக்க வேண்டும்” என கூறி உள்ளார்.