சென்னை:
10வது வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில், தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் புதுச்சேரி மாணவ மாணவிகள் மிகவும் எதிர்பார்த்திருந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. மொத்தத்தில் 95.2 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், இவர்களில் மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள்- 93.3 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பதாக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. புதுச்சேரியில் 97.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே-2ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் * தனி தேர்வர்கள், மே-6ஆம் தேதி முதல் http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகள், தட்கல் முறையில் சிறப்பு தேர்வு எழுதுவதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, ஜூன் 14 முதல் 22 வரை: 10ம் வகுப்பு சிறப்பு துணைப்பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வுத்துறை தேதிகளை அறிவித்து உள்ளது.