தர்மசாலா:

இந்திய-பெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையின் முன்னாள் உதவி கமாண்டர் ஓம் பிரகாஷ், சீருடையில் வந்து பாஜகவில் சேர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார பேரணி அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் நடந்தது.

இந்த பேரணியில் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் போலீஸ் படை முன்னாள் உதவி கமாண்டர் ஓம் பிரகாஷ் சீருடையில் வந்து பாஜகவில் சேர்ந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநில சட்டபேரவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான முகேஷ் அக்னிஹோத்ரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் அரசியல் மேடையில் பங்கேற்பது தேர்தல் விதிமீறல் என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் பாதுகாப்புப் படைகளை தவறாக பயன்படுத்துவது பாஜகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஓம் பிரகாஷ், சீருடையில் வருவதற்காக ஏற்கெனவே முதல்வரிடம் அனுமதி பெற்று விட்டதாக தெரிவித்தார்.