மும்பை: பாரதீய ஜனதாக் கட்சி, வாக்காளர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெற்று, அதன்மூலம் ஒவ்வொரு தனிப்பட்ட வாக்காளரையும் டிஜிட்டல் முறையில் அணுகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு ஆதாரமாக, தன் தனிப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த ஒரு வாட்ஸ்ஆப் செய்தியை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் மும்பை வாக்காளர் ஒருவர்.

அவருக்கு வந்த டிவிட்டர் செய்தியில், அவரின் பெயர், வாக்காளர் அடையாள எண் மற்றும் தேர்தல் நடைபெறும் தேதி போன்றவை இடம்பெற்றுள்ளதோடு, பாரதீய ஜனதாவுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோளும் இடம் பெற்றிருந்தது.

பாரதீய ஜனதா மக்களவை உறுப்பினர் கோபால் ஷெட்டி சார்பாக, அவரின் தொகுதிவாசிகளுக்கு இந்த வாட்ஸ்ஆப் செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.

இவரைத் தவிர, இன்னொரு நபரும், தாங்கள் கோபால் ஷெட்டியிடமிருந்து இந்த வாட்ஸ்ஆப் செய்தியைப் பெற்றிருப்பதாக டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதன்மூலம், பாரதீய ஜனதாக் கட்சி, வாக்காளர்களின் தனிப்பட்ட விபரங்களை எப்படி பெற்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.