மும்பை
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி காங்கிரசுக்கும் அவர் மகன் ஆனந்த் அம்பானி பாஜகவுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் புகழ்பெற்ற பிரபல தொழிலதிபர் குடும்பங்களில் அம்பானி குடும்பமும் ஒன்றாகும். இந்த அம்பானி குடும்பத்தை சேர்ந்த அனில் அம்பானியை ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இவரது சகோதரரும் இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தருமான முகேஷ் அம்பானி ஜியோ நிறுவன அதிபர் ஆவார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தொகுதி தேர்தலில் தெற்கு மும்பையில் மகிந்த் தியோரா காங்கிரஸ் சார்பில் போட்டி இடுகிறார் முகேஷ் அம்பானி இவருக்கு ஆதரவு அளித்துள்ளார். மிலிந்த் தியோராதான் தெற்கு மும்பைக்கு சரியான வேட்பாளர் என புகழாரம் சூட்டி உள்ளார்.
சமீபத்தில் மும்பை நகரில் உள்ள குர்லா பகுதியில் மோடி ஆதரவு பிரசாரக் கூட்டம் ஒன்று நடந்தது. இதற்கு முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி கலந்துக் கொண்டு முன் வரிசையில் அமர்ந்துள்ளார். இந்த நிகழ்வு வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பல மராட்டி செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளனர்.