கொழும்பு
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை முன் நின்று நடத்திய தவ்ஜீத் ஜமாத் தலைவர் ஜக்ரன் ஹாசிம் அதே குண்டு வெடிப்பில் பலியானதாக இலங்கை அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் கொழும்பு நகரில் காலை 8.45 மணி முதல் 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர்கொல்லபட்டனர். இந்த குண்டு வெடிப்புக்கு இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஐ எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த குண்டு வெடிப்பு தொடர்னாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, “இலங்கையில் உள்ள தவ்ஜீத் ஜமாத் தலைவர் ஜக்ரன் ஹாசிம் ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய பங்கேற்றுள்ளான். இவன் இந்த குண்டு வெடிப்பில் மரணம் அடைந்துள்ளான். குண்டு வெடிப்பு நடந்த ஓட்டலின் சிசிடிவி காட்சியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிகம் அறியப்படாதவனாக இருந்த ஜக்ரன் ஹாசிம் இரு வருடங்களுக்கு முன்பு புத்தர் சிலைகளை உடைத்ததன் மூலம் அறியப்பட்டான். உள்ளூர் இஸ்லாமிய இயக்கமான தவ்ஹீத் ஜமாத் தலைவனான இவன் யு டியூப் தளத்தில் இஸ்லாமியர் அல்லாதோரை தாக்கி பேசி வீடியோ வெளியிட்டு வந்தவன் ஆவான். ஈஸ்டர் தினத்தன்று குண்டு வைத்த தற்கொலை படையினர் என ஐஎஸ் வெளியிட்டுள்ள வீடியோவிலும் இவன் காணப்பட்டான்.
[youtube-feed feed=1]