புதுச்சேரி:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பலம் பெற்ற நிலையில் புயலாக உருவாகி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கடற்கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 30ந்தேதி மற்றும் ஏப்ரல் 1ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் முன்னெச்சரிக்கையை நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார். கோடை கால விடுமுறை எடுத்திருந்த அனைத்து அரசு துறை அதிகாரி களும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டு உள்ளது.
மேலும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன், அனைத்து துறைகளும் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதனிடையே புதுச்சேரியில், புயல் குறித்த தகவல் மற்றும் தொடர்புக்கு இலவச எண் 1077 என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாகும் எச்சரிக்கையை அடுத்து தலைமை செயலாளர், மாவட்டஆட்சியர், பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் காவல்துறை யினருடன் புதுவை முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
[youtube-feed feed=1]