சென்னை:

மிழகத்தின் வங்கக்கடலில் உருவாகி வரும் குறைந்த காற்றதழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில், ஃபனி..புயல் எந்த பக்கம் கரையை கடக்கப்போகிறது என்பது குறித்தும், எச்சரிக்கையாக இருக்க வேண்டியது தொடர்பாகவும்  தமிழ்நாடு வெதர்மேன் வீடியோ மூலம் மக்களுக்கு தெரிவித்து உள்ளார்.


தமிழகத்தின் பல இடங்களில் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், இந்திய பெருங்கடல் – வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வரும் 28,29 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தென் தமிழகத்தில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், “தற்போது வர இருக்கும் புயல் மிகவும் தீவிரமடைந்து எந்த பகுதிக்கு செல்கிறதோ அங்கு ஏராளமான மழையை கொடுக்கும். தமிழகத்தில் கரையை கடந்தால் வறட்சி போய், பின்னர் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று எச்சரித்துள்ளவர், இந்த புயல் தமிழகத்துக்கானதா என கணிக்க மேலும் ஒருசில நாட்கள் தேவை என்பதையும் தெரிவித்து உள்ளார்.

பிரதீப் ஜான் என்ன கூறுகிறார்…. கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்…