சென்னை:
தமிழகத்தில் நடைபெற உள்ள 4தொகுதி இடைதேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 18 ந்தேதி நடைபெற்ற மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், உச்சநீதி மன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, அனைவருக்கும் ஒரே சின்னமாக பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிட்டனர்.
இந்தநிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும், தங்களுக்க பரிசுப்பெட்டி சின்னமே ஒதுக்க வேண்டும் என்று டிடிவி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டது.
இதை ஏற்று தேர்தல் ஆணையம் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை டிடிவியின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் உறுதிப்படுத்தி உள்ளார்.
அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளிலும் மே 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.