கோபன்ஹேகன்: இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல்களில், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெரும் செல்வந்தரின் 3 குழந்தைகள் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்புவில் ஈஸ்டர் ஞாயிறன்று, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த 8 குண்டுவெடிப்பு சம்பவங்களில், இதுவரை 290 பேர் பலியானதோடு, 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த தாக்குதலில், டென்மார்க் நாட்டின் பெரும் செல்வந்தர் ஆண்டர்ஸ் ஹோல்க் போவில்சனின் 3 குழந்தைகள் பலியாகிவிட்டனர். இவர் ஆடை வடிவமைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளார். வெரோ மொடா மற்றும் ஜேக் & ஜோன்ஸ் ஆகிய பிராண்டுகள் இவருடையதுதான்.
ஆண்டர்ஸ் ஹோல்க் போவில்சனின் 3 குழந்தைகளும் பலியாகிவிட்ட தகவலை, அவரின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். ஆண்டர்ஸ் ஹோல்க் போவில்சனின் குடும்பம் விடுமுறையைக் கழிப்பதற்காக கொழும்பு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
– மதுரை மாயாண்டி