அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம்.தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில், அண்மையில் யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியாகின. பொன்னியின் செல்வன்’ என்ற பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது கால்ஷீட் பிரச்சனையால் இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கவில்லையாம். அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்க இயக்குனர் மணிரத்னம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]