கமதாபாத்

ந்திய நிர்வாகத்துறை பயிலகத்தின் பட்ட மேற்படிப்பில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

இந்திய நிர்வாகத்துறை பயிலகத்தில் அகமதாபாத் பயிலகம் (INDIAN INSTITUTE OF MANAGEMENT) உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பயிலகம் நிர்வாகிகளுக்காக பட்ட மேற்படிப்பு கல்வியை அளித்து வருகிறது. உலகெங்கும் உள்ள பல மாணவர்கள் இந்த கல்வி பயில ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அகமதாபாத்தில் உள்ள இந்த இந்திய நிர்வாகத் துறை பயிலகத்தின் ஒரு வருட கால பட்ட மேற்படிப்பு கல்வி வகுப்பில் சென்ற வருடம் 138 மாணவ மாணவிகள் சேர்க்கபட்டு இருந்தனர். அதில் மாணவிகள் 17% பேர் இருந்தனர்.

இந்த வருட பட்டமேற்படிப்பு வகுப்பில் 140 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று இவர்களுக்கான வகுப்பு ஆரம்பித்தது. இந்த வருடம் மாணவிகள் எண்ணிக்கை 23% ஆக உயர்ந்துள்ளது.