டில்லி

யோத்தி ராம்ர் கோவிலில் பூஜை நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி நகரில் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக கூறி பாபர் மசூதியை ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட அமைப்புகள் இடித்து நொறுக்கின.   அதன் பிறகு அங்கே ஒரு ராமர் சிலை தற்காலிகமாக வைக்கப்பட்டு பூஜைகள் தொடரப்பட்டன.    இது குறித்த வழக்கின் காரணமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் பூஜைகள் நிறுத்தப்பட்டன.

சர்ச்சைக்குரிய  அந்த மசூதி நிலம் குறித்த வழக்கு உச்சநீதிமன்ற நிலுவையில் உள்ளது.   இந்நிலையில் ராமர் கோவிலில் பூஜை நடத்த முற்பட்ட ராம பக்தர் ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு நீதிமன்ற ஆணையை மீறியதற்காக  அலகாபாத் நீதிமன்றம் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது

ஏற்கனவே இவரைப் போலவே மற்றொரு இஸ்லாமியர் அங்கு நமாஸ் நடத்த அனுமதி கோரி நமாஸ் நடத்த தொடங்கினார்.   அதற்கும் தடை விதிக்கப்பட்டு அலகாபாத் நீதிமன்றம் அவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது.

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராம பக்தர் ர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.  அத்துடன் பூஜைகள் நடத்த இந்த மேல்முறையீட்டு மனுவில் அனுமதி கோரி இருந்தார்

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.   தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய், “நீங்கள் இந்த நாட்டில் அமைதி நிலவவே விட மாட்டீர்களா? ஒன்று மாற்றி பிரச்சினையை கிளப்புவீர்களா?” என கடிந்துக் கொண்டார்.   அத்துடன் பூஜை நடத்த அனுமதி கோரிய இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அலகாபாத் அளித்த ரூ.5 லட்சம் அபராதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]