தருமபுரி:

ட்டு வழிச்சாலைக்கு எதிராக முதன்முதலில் வழக்கு போட்டு எட்டு வழிச்சாலையை தடுத்து நிறுத்தியது நான்தான் என்று  பாதிக்கப்பட்ட தர்மபுரியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

நான் பாடுபட்ட விளைய வைத்ததை, அன்புமணி அறுவடை செய்து வருகிறார் என்று  கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் விலை நிலங்கள் உள்பட மலைகள், ஏரிகள் போன்றவற்றை தமிழக அரசு கையப்படுத்தியது. இதற்காக புதிய அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த திட்டம் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை மொத்த இணைத்து  விசாரித்த, சென்னை உயர் நீதி மன்றம்,   நிலம் கையப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடனே உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது.

உயர்நீதி மன்றத்தின்  தீர்ப்புக்கு பொதுமக்கள் மிகுந்த  வரவேற்பு தெரிவித்து உள்ளனர். அதே வேளையில் பாமகவும் தங்களது வழக்கின் அடிப்படையிலேயே தீர்ப்பு கிடைத்திருப்பதாக அறிக்கை வெளியிட்டும் தேர்தல் பரப்புரையின்போதும் பேசி வருகிறது.

இதற்கு, 8 வழிச்சாலையை எதிர்த்து முதன்முதலில் வழக்கு தொடுத்த தர்மபுரி விவசாயி கிருஷ்ண மூர்த்தி கடும்கண்டனம் தெரிவித்து உள்ளார்.  பாடுபட்டு விளைய வைத்தது நான்! அறுவடை செய்வது நீங்களா? என்று கேள்வி எழுப்பியவர்,  எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கை அன்புமணி முதலில் போட்டதாக பொய் கூறுவதா என்று கேள்வி எழுப்பியவர், இது தொடர்பாக  என்னோடு அன்புமணி விவாதத்திற்கு தயாரா? என்று சவால் விட்டுள்ளார்.

இதுகுறித்து எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வி. கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பதாவது,  8வழிச்சாலைக்கு எதிரான வழக்கை முதலில் போட்டு அவ்வழக்கின்மூலம் (வழக்கு எண். W.P. No. 16630/2018) எட்டு வழிச்சாலைக்கு எதிராக தடை யாணையையும் பெற்றது நான்தான்.  நீதிமன்றத்தின்  தடை உத்தரவு தீர்ப்பின் முதல் பக்கத்திலேயே என் பெயர் இடம் பெற்றுள்ளது என்று சுட்டிக்காட்டியவர், ஆனால் பாட்டாளி மக்கள் கட்சினரும்,  சில ஊடகங்களும் அன்புமணி மட்டுமே எட்டு வழிச்சாலைக்கு எதிராக வழக்குப் போட்டு இத்தீர்ப்பை பெற்றுத் தந்ததாக பொய் பேசி வருகிறார்கள்.

இந்த வழக்கை முதலில் தொடுத்தது பாமகதான் என்று பொய் கூறிவருகிறார்கள் என்றவர்,  சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் கூறியிருப்பது போல், இந்த வழக்கின்  115 பக்க தீர்ப்பில் அன்புமணி பெயரோ, அவரின் வழக்கறிஞர் பெயரோ ஒரு இடத்தில்கூட குறிப்பிடப் படவில்லை என்பதையும் தெளிவு படுத்தினார்.

யாரோ பெத்த பிள்ளைக்கு யாரோ இனிசியல் போடுவது போல், நான் போராடி பெற்ற தீர்ப்புக்கு, பாமகவும்,  அன்புமணியும் உரிமை கொண்டாடப் பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டியவர், அவருக்கு ஆதரவாக  சில ஊடகங்களும் இத்தவறைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாமகவும், அன்புமணியும் போட்ட வழக்கினால்தான் இத்தீர்ப்பு வந்ததது என்று இனிமேலும் பொய் சொல்ல வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, துணிச்சல் இருந்தால்  அன்புமணி அவர்கள் என்னோடு நேரடி விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன். அங்கு நான்தான் எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கை முதலில் போட்டேன் என்பதை நிரூபித்துக் காட்ட தயாராக இருக்கிறேன் என்றும் சவால் விடுத்துள்ளார்.

இத்துடன் அவரது முகவரியையும் கொடுத்துள்ளார்.

பி.வி. கிருஷ்ணமூர்த்தி,

பாதிக்கப்பட்ட விவசாயி எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

அ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிபட்டி தாலுகா

தருமபுரி மாவட்டம் . செல்: 8608696252