சென்னை:
அண்ணாநகரில் உள்ள தி.மு.க. பிரமுகர் பரமசிவம் வீட்டில் மர்ம நபர்கள் இன்று காலை பெட் ரோல் குண்டு வீசினர். இதில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
நேற்று வாக்கு சேகரிக்கும்போது, எஸ்டிபிஐ கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்த இந்த குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நீடித்து வருகிறது..
அண்ணாநகர் தி.மு.க. பகுதி செயலாளராக இருப்பவர் பரமசிவம். இவரது வீடு டி.பி.சத்திரம் தர்மராஜா கோவில் தெருவில் உள்ளது. இங்கு இன்று காலை மர்ம கும்பல் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஓடிவிட்டது. இதில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் எரிந்து நாசனமாது.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்த வந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். . பரமசிவத்தின் வீட்டு முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த குண்டு வீச்சு சம்பவத்துக்கு நேற்று நடைபெற்ற தகராறே காரணம் என்று கூறப்படுகிறது.
நேற்று தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி கட்சி சார்பில், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த தெகலான்பாகவி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக இந்திய தவ்கீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த பெண்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, அங்கு திரண்ட திமுகவினர், அவர்களுக்கு எதிராக பேசியதால் தகராறு மூண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமைந்தகரை காவல் நிலையில், தவ்கீத் ஜமாத் கிட்சியினர், தங்களது கட்சி யினரை திமுக செயலாளர் பரமசிவம் உள்பட பலர் தாக்கியதாக புகார் கூறி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இரு கட்சியினரும் திரண்டதால் நள்ளிரவு முதலே பரபரப்பு நிலவி வந்தது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலையில் தி.மு.க. பிரமுகர் பரமசிவம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டை வீசிய எஸ்டிபிஐ கட்சியினர் என்று திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.