புதுடெல்லி: வாக்களிப்பதற்கு முன்னதாக, தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை, வாக்களிக்கும் மையத்தில் காட்டுமாறு கூறியுள்ள தேர்தல் ஆணையம், அந்த அட்டை இல்லாதவர்கள் பயன்படுத்தக்கூடிய வேறு 11 வகையான ஆவணங்கள் குறித்தும் விளக்கமளித்துள்ளது.
அதேசமயம், வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல், புகைப்படம் ஒட்டிய வாக்காளர் சீட்டு மட்டுமே இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டது.
தேர்தல் ஆணையம் வகைப்படுத்தியுள்ள 11 அடையாள ஆவணங்கள்:
1. பாஸ்போர்ட்
2. ஓட்டுநர் உரிமம்
3. மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை
4. வங்கி மற்றும் தபால் நிலையங்களால் அளிக்கப்பட்ட புகைப்படம் ஒட்டிய பாஸ்புக்
5. பேன் கார்டு
6. ஆர்.ஜி.ஐ. அளித்துள்ள ஸ்மார்ட் கார்டு
7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் அடையாள அட்டை
8. வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்டு
9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
10. சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
11. ஆதார் அட்டை
இவைகளை அடையாளமாகக் கொண்டும் வாக்களிக்கலாம்.
– மதுரை மாயாண்டி