ரேபரேலி:
உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இன்று வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக இன்று காலை தேர்தலில் வெற்றி பெற வேண்டிய சிறப்பு பூஜை நடத்தினார்.
அதுபோல அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக அமைச்சர் ஸ்மிரிதி ராணியும் சிறப்பு பூஜை நடத்தினார்.
ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தியுடன் ரேபரேலியில் ஊர்வலமாக சென்று தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்கிறார்.
முன்னதாக இ ரேபரேலி வந்த சோனியா காந்தி அங்கு மகன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். தேர்தலில் வெற்றி பெற வேண்டி அவர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.
உ.பி. மாநிலம் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் மே 6ம் தேதி நடைபெற உள்ள 5ம் கட்ட மக்களவைத் தேர்தலின் போது சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் வெளியேறி பாஜகவில் இணைந்த தினேஷ் பிரதாப் சிங், சோனியா காந்திக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளார்.
சோனியா, ராகுல் போட்டியிடும் தொகுதிகளில் பிஎஸ்பி, சமாஜ்வாதி கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தாமல் ஆதரவு தெரிவித்து உள்ளது.
அதுபோல அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் ஸ்மிரிதி இரானியும் கணவருடன் இணைந்து யாக பூஜை நடித்தினார்.
அதன்பின்னர் அங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செல்ல ஊர்வலமாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.