டில்லி:
ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவருக்கும் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் (ஏப்ரல் 11) இன்று தொடங்கி மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், தேர்தலில் அதிக அளவிலான மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி, இந்திய ஜனநாயகத் தில், வலுவான அடித்தளத்தை அமைக்கவேண்டும் என கூறி உள்ளார்.
பொதுமக்கள் யாருக்கும், எதற்கும் அச்சப்படாமல் தங்கள் கடமையை நிறைவேற்றவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மகளிர், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.