சென்னை:

சென்னை சேலம் 8வழிச்சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம்  இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து, தங்களது விவசாய நிலங்களில் கையகப்படுத்திய அரசு நில அளவைகளை முடித்து, அதற்கு அடையாளமாக கற்களை நட்டு வைத்திருந்தது.

இன்று தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, ,தங்களது நிலங்களில் நட்டியிருந்த கற்களை விவசாயி கள் பிடுங்கி எறிந்தனர். இந்த நிலையில், மத்திய மாநில அரசுகளும் ஏப்ரல் 18ந்தேதி  அன்று தேர்தல் வாக்குப்பதிவு மூலம தூக்கி எறியப்படும் என தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், திமுக மகளிர் அணி தலைவருமான கனிமொழி டிவிட் போட்டுள்ளது.

அதில்,  சேலம் எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களில் இருந்த கற்களை பிடுங்கி எறிந்தார்கள்.இந்த ஆளும் அராஜக அரசும் இதே போல் ஏப்ரல் 18 அன்று தூக்கி எறியப்படும் என்று பதிவிட்டுள்ளார்.