டில்லி:
உ.பி. மாநிலம் அமேதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரும் 10ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி அமேதியில் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், 2வது தொகுதியாக கேரளா வயநாட்டிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், அமேதியில் ராகுல்காந்தி வரும் 10ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. ஆனால், ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி வரும் 11ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிடும் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் 5வது கட்ட தேர்தல் நாளான மே 6ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.