டெல்லி:

பிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி டெல்லி கேபிடல் அணியை விழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின்  16-வது லீக் ஆட்டம்  டெல்லி பெரோஸ் ஷா மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற  புவனேஷ்வர் குமார் தலைமையிலான ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதன் காரணமாக ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி மட்டையுடன் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக  களமிறங்கிய பிரித்திவி ஷா 11(11) மற்றும் ஷிகர் தவான் 12(14) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 43 (41) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். ஆனால் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சன் ரைசர்ஸ் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமலும், தங்களது திறமையை வெளிப்படுத்தி தவறியதால் மளமள வெளி யேறினர். இதனால் டெல்லி அணி ரசிகர்கள் கடும் சோகம் அடைந்தனர்.

டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஐதராபாத் அணி சார்பில் பந்து வீசிய புவனேஷ்வர் குமார், நபி மற்றும் கவுல் தலா 2 விக்கெட் குவித்தனர்.

இதைத் தொடர்ந்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆரவாரமாக களமிறங்கியது. ஆனால், தொடக்க வீரராக களமிறங்கிய  டேவிட் வார்னர் 10(18) ரன்களில் வெளியேற ஆட்டம் சன் ரசிகர்கள் திடுக்கிட்டனர். இருந்தாலும்,  ஜான் பாரிஸ்டோவ் நிதானமாக விளையாடி 48(28) ரன்கள் குவித்தார்.  ஆனாலும், தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும்  அடுத்தடுத்து வெளியேற ஆட்டம் தடுமாற்றத்துடனேயே சென்றது.

இருந்தாலும் சமாளித்து, வெற்றி பெற வேண்டும் என்று நோக்கத்திலேயே ஆடிய சன் ரைசர்ஸ் இறுதியில்  18.3-வது பந்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் குவித்தது.

சன் ரைசர்ஸ் வீரர் ஜா பெயர்ஸ்டொ 28 பாலில் 48 ரன்கள் எடுத்து, மேன் ஆப் தி மேட்ச் அவார்டு வாங்கினார்,

இதனையடுத்து ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி காரணமாக சன் ரைசர்ஸ்அணி சிஎஸ்கே அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது.