டில்லி
வேலைவாய்ப்பு தளமான லின்க்ட் இன் தளத்தில் இந்தியர்கள் பணி புரிய விரும்பும் 10 நிறுவன பட்டியலை வெளியிட்டுள்ளது.
வேலை வாய்ப்பு தளமான லின்க்ட் இன் சமீபத்தில் இந்திய பணியாளர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நிகழ்த்தியது. அதில் இடம் பிடித்துள்ள நிறுவனங்களில் பத்து இடங்களை பிடித்துள்ள நிறுவனம் குறித்த பட்டியலையும் விவரங்களையும் வெளியிட்டுள்ளது. இதில் நிறுவனத்தின் மீதுள்ள விருப்பம், ஊழியர்களின் உறவுகள், வேலைத்தேவை, மற்றும் தொடர்ந்து பணிபுரிதல் ஆகியவைகளைக் கொண்டு இந்த பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த கவுண்ட் டவுன் :
பத்தாம் இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் லிமிடெட் உள்ளது. இந்த நிறுவனம் : எண்ணெய் மற்றும் மின் உற்பத்தி பிரிவின் கீழ் வருகின்றது. இதில் 29500 பேர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்கள் மும்பை, ஜாம்நகர் மற்றும் டில்லியில் உள்ளன.
ஒன்பதாம் இடத்தில் அல்பபெட் இன்க் உள்ளது. இது தொழில்நுட்ப பிரிவின் கீழ் வருகின்றது. இதில் 98000 பேர் பணி புரிகின்றனர். இந்த நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்கள் டில்லி, ஐதராபாத் மற்றும் பெங்களூரில் உள்ளன. இந்த நிறுவனத்தின் முக்கிய பணிகள் மார்கெடிங், பொறியியல், மீடியா மற்றும் தொடர்புத்துறை ஆகும்.
எட்டாம் இடத்தில் சொமோட்டோ சர்வீஸஸ் உள்ளது. இது தொழில்நுட்ப பிரிவின் கீழ் வருகின்றது. இதில் 4000 பேர் பணி புரிகின்றனர். இந்த நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்கள் டில்லி, குருகிராம் மற்றும் மும்பையில் உள்ளன. இந்த நிறுவனத்தின் முக்கிய பணிகள் விற்பனை, மார்கெடிங், வர்த்தக முன்னேற்றம் ஆகும்.
ஏழாம் இடத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளது. இது தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை பிரிவின் கீழ் வருகின்றது. இதில் 4,17,900 பேர் பணி புரிகின்றனர். இந்த நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்கள் மும்பை, சென்னை மற்றும் பெங்களூரில் உள்ளன. இந்த நிறுவனத்தின் முக்கிய பணிகள் சேவை, பொறியியல், மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகும்.
ஆறாம் இடத்தில் ஸ்விக்கி உள்ளது. இது தொழில்நுட்ப பிரிவின் கீழ் வருகின்றது. இதில் 6,900 பேர் பணி புரிகின்றனர். இந்த நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்கள் டில்லி மற்றும் பெங்களூரில் உள்ளன. இந்த நிறுவனத்தின் முக்கிய பணிகள் விவ்ர்ம் சேகரித்தல், மார்கெட் ஆய்வு, மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகும்.
ஐந்தாம் இடத்தில் உபேர் உள்ளது. இது தொழில்நுட்ப பிரிவின் கீழ் வருகின்றது. இதில் 1,700 பேர் பணி புரிகின்றனர். இந்த நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்கள் மும்பை, டில்லி மற்றும் ஐதராபாத்தில் உள்ளன. இந்த நிறுவனத்தின் முக்கிய பணிகள் வர்த்தக முன்னேற்றம், பொறியியல், மற்றும் செயல்பாடு ஆகும்.
நான்காம் இடத்தில் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் உள்ளது. இது தொழில்நுட்ப பிரிவின் கீழ் வருகின்றது. இதில் 7,200 பேர் பணி புரிகின்றனர். இந்த நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்கள் மும்பை, டில்லி மற்றும் நொய்டாவில் உள்ளன. இந்த நிறுவனத்தின் முக்கிய பணிகள் விற்பனை, பொறியியல், மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகும்.
மூன்றாம் இடத்தில் ஓயோ உள்ளது. இது விருந்தோம்பல் பிரிவின் கீழ் வருகின்றது. இதில் 7,00 பேர் பணி புரிகின்றனர். இந்த நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்கள் குருகிராம், டில்லி மற்றும் பெங்களூரில் உள்ளன. இந்த நிறுவனத்தின் முக்கிய பணிகள் வர்த்தக முன்னேற்றம், விற்பனை, மற்றும் செயல்பாடு ஆகும்.
இரண்டாம் இடத்தில் அமேசான் உள்ளது. இது ஈ காமர்ஸ் பிரிவின் கீழ் வருகின்றது. இதில் 50,000 பேர் பணி புரிகின்றனர். இந்த நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்கள் சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் உள்ளன. இந்த நிறுவனத்தின் முக்கிய பணிகள் வாடிக்கையாளர் சேவை, பொறியியல், மற்றும் செயல்பாடு ஆகும்.
முதல் இடத்தில் ஃப்ளிப்கார்ட் (வால்மார்ட்) உள்ளது. இது ஈ காமர்ஸ் பிரிவின் கீழ் வருகின்றது. இதில் 13,900 பேர் பணி புரிகின்றனர். இந்த நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்கள் மும்பை, டில்லி மற்றும் பெங்களூரில் உள்ளன. இந்த நிறுவனத்தின் முக்கிய பணிகள் உற்பத்தி மேலாண்மை, பொறியியல், மற்றும் கல்வி ஆகும்.