டோக்யோ

ப்பான் அரசு அளித்துள்ள 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு ஜப்பானியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் நாடு தற்போது குடியரசு நாடாகும்.   இதற்கு முன்பு ஜப்பானில் மன்னராட்சி நடைபெற்றது.   மன்னர் பதவி விலகிய நாளான ஏப்ரல் 30 இந்நாட்டில் குடியரசு மலர்ந்த நாளாக கொண்டாடப்படுகிறது.   அத்துடன் உழைப்பாளர் தினம் உள்ளிட்டவைகள் தொடர்ந்து வருவதால் ஜப்பானிய அரசு 10 நாட்கள் தொடர் விடுமுறை அளித்துள்ளது.

ஆனால் உழைப்பு விரும்பிகளான ஜப்பானிய ஊழியர்கள் பலர் இவ்வாறு விடுமுறை அளிப்பதை எதிர்த்துள்ளனர்.   ஜப்பானிய நாளேடு ஒன்று எடுத்த கணக்கெடுப்பின்படி இந்த விடுமுறையை 45% ஊழியர்கள் மட்டுமே வரவேற்றுள்ளனர்.   அவர்களில்  பெரும்பாலானோர் வசதியான ஊழியர்கள் ஆவார்கள்.   பலரும் இந்த 10 நாட்களில் வெளிநாட்டு சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

விடுமுறையை எதிர்ப்பவர்களில் ஒருவரான டெகுரு ஜோ என்பவர், “எனக்கு  வேலைகள் அதிகம் உள்ளன.  இந்த வேளையில் தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை அதிகமாகும்.  அது மட்டுமின்றி பள்ளிகள், குழந்தை பராமரிப்பு நிலையங்கள் போன்றவைகளின் 10 நாட்கள் விடுமுறையால்  பெற்றோர்களுக்கு மிகவும் கஷ்டம் உண்டாகும்.

பொதுவாக இந்த 10 நாட்களை எப்படி கழிப்பது என்றே எங்களுக்கு தெரியவில்லை.   எங்காவது வெளியில் செல்லலாம் என்றால் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.  அது மட்டுமின்றி விடுமுறை நாட்களால் தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கும்.” என தெரிவித்துள்ளார்.