டில்லி:

மீபத்தில் மிஷன் சக்தி திட்டம் மூலம் இந்தியா, செயல்படாத செயற்கை கோளை ஏவுகணை மூலம் உடைத்து நொறுக்கி அழித்தது.

இதற்கு ஒருபுறம் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சைனா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து கூறிய அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா,  ‘மிஷன் சக்தி’ சோதனை விண்வெளியில் இந்தியா குப்பை துகர்களை ஏற்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் ”இந்தியாவின் ASAT ’ஒரு கொடுமை யான விஷயம்’. 400 குப்பைத் துகள்கள் விண்வெளியில் நிறைந்துள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தான் இடையூறு” என கூறியிருந்தார்.

இதற்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான  இஸ்ரோ பதிலடி கொடுத்துள்ளது.

குஜராத் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் ‘இஸ்ரோ’ தலைவரின் சீனியர் ஆலோசகர் தயின் மிஸ்ரா பேசும்போது,  “நண்பர்களுக்கு பல நன்மைகள் செய்திருந்தாலும் கூட உங்களது திருமணத்தின் போது சாப்பாடு சரியில்லை என்று குறைசொல்வது வழக்கம்.
அதுபோன்ற நிலை தான் விண்வெளியில் 300 கி.மீ தூரத்தில் நடந்துள்ளது.

சோதனையின் போது சிறிய துண்டுகள் விண்வெளியில் 300 கி.மீ தூரத்தில் குறைந்த காற்றழுத்த பகுதியில் உள்ளது. எனவே அவை இன்னும் 6 மாதத்தில் எரிந்து விடும். இந்தியா நடத்திய ‘மி‌ஷன் சக்தி’ வெடிவிபத்து அல்ல. அது ஒரு புல்லட் போன்றது.

சீனா விண்ணில் 800 கி.மீ தூரத்தில் பரிசோதனை நடத்தியது. அங்கு அதிக காற்றழுத்தம் இல்லை. இதனால் அதன் சிதைந்த பாகங்கள் விண்ணில் இன்னும் மிதக்கின்றன. ஆனால் இந்தியா தாக்கி சிதைத்த செயற்கைகோள் துண்டுகள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் மிதப்பதால் 6 மாதத்தில் எரிந்து விடும்”.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய  நடத்திய விண்வெளி தாக்குதல் ‘மிஷன் சக்தி’ மூலம் உலகின் சூப்பர் ’ஸ்பேஸ் பவர்’ நாடுகளுள் ஒன்றாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.