
டைரக்ட்டர் மகேந்திரனின் மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. மகேந்திரனின் உடல் நல்லடக்கத்துக்குப் பிறகு, அவரது மகன் ஜான் வெளியிட்ட ட்விட்டர் பதிவு கண்கலங்க வைக்கும் விதமாக இருந்தது.
“அப்பா… இனி நீங்கள் கால் வலியில் துடிக்க போவதில்லை. முதுகு வலியில் கஷ்டப்பட போவதில்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் நீங்கள் எங்களுடன் இல்லாத வலியில் நாங்கள் துடிக்க போகிறோம்” என்று பதிவிட்டுள்ளார் ஜான் ரோஷன்.
மகேந்திரனுக்கு நேரிலும், சமூகவலைத்தளத்திலும் அஞ்சலி செலுத்தியவர்கள் ஜான் ரோஷனுக்கும் ஆறுதல் கூறினார்கள்.
Patrikai.com official YouTube Channel