துபாய்
ஈஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மனு சானே சரவதேச கிரிக்கெட் கமிட்டியின் தலைமை அதிகாரி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) தற்போது தலைமை அதிகாரியாக தேவ் ரிச்சர்ட்சன் பதவி வகித்து வருகிறார். இவர் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிகள் வரை இந்த பதவியில் இருப்பார். எனவே அவருடைய பணிக்கு உதவியாளராக கடந்த ஜனவரி மாதம் மனு சானே நியமிக்கப்பட்டார்.
மனு சானே 17 வருடங்கள் ஈஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகக்ட்சியில் பணி புரிந்தவர் ஆவார். இவர் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி இரு மடங்காக பெரிதும் பாடுபட்டவர் ஆவார். ஐசிசியின் உதவி தலைமை அதிகாரியாக இருந்த மனு சானே நேற்று முதல் தலைமை அதிகாரியாக பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் ரிச்சர்ட்சனுடன் தொடந்து பணி புரிவார்.
இது குறித்து மனு சானே, “நான் தேவ் ரிச்சர்ட்சன் இடம் இருந்து பொறுப்புக்களை பெறுவதில் பெரிதும் மகிழ்கிறேன். கடந்த 7 வருடங்களாக அவர் திறம்பட பணி ஆற்றிஉள்ளார். நான் எனது பணியை சிறப்பாக செய்ய மற்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன். நான் எனது கடமையை உறுப்பினர்கள், பங்குதாரர்கள், மற்றும் ஊழியர்களின் வழிகாட்டுதலுடன் திறம்பட நடத்துவேன் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.