திருப்பூர்:
காங்கிரஸ் ஆதரவுடன் மாநில கட்சியை சேர்ந்த ஒருவரே பிரதமராவார் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், மத்தியில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. மாநில கட்சிகளே அதிக இடங்களில் வெற்றி பெறுவர்.
அப்போது, மாநில கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக காங்கிரஸ் ஆதரிக்கும். அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்பது, அவர்கள் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கையை பொறுத்தே அமையும்.
பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் இந்த முடிவை எடுக்கும் என்றார்.
Patrikai.com official YouTube Channel