அமராவதி:

ந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு  எதிராக தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில், பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகர், தனது மனைவி ஜீவிதாவுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இதுதாண்டா போலீஸ் தமிழ் டப்பிங் படம் உள்பட  ஏராளமான தெலுங்கு படங்கிள்ல நடித்தவர் பிரபல நடிகர் ராஜசேகர். இவரது மனைவி  ஜீவிதா. இவரும் தமிழ் தெலுங்கு உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நட்சத்திர தம்பதி கடந்த 2008ம்ஆண்டு  ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ராஜசேகர ரெட்டி இருந்தபோது, அவரது முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பின்னர் ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு இருவரும் கட்சியில் இருந்து விலகினர்.

அதையடுத்து பாஜகவில் இணைந்தனர். அங்கு அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாத நிலையில், அங்கிருந்து விலகி தற்போது   ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருவரும் இணைந்துள்ளனர்.   ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை, அவரது இல்லத்தில் சந்தித்து தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.