தராபாத்

க்களவை தேர்தலில் கூட்டாட்சி அணி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தெலுங்கான முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

நடைபெற உள்ள மக்கள் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.   இந்நிலையில் சில மாநிலக் கட்சிகள் மூன்றாம் அணியாக அதாவது இரு அணிகளுடனும் இணையாமல் போட்டி இடுகின்றன.    இதில் தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்டிய சமிதி கட்சியும் ஒன்றாகும்.    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் தனது மாநிலத்தில்  கூட்டாட்சி அணி என ஒரு அணி அமைத்து போட்டி இடுகிறார்.

சந்திரசேகர் ராவ். “மக்கள் கடந்த 2014 ஆம் அண்டு மோடியை நம்பி அவருக்கு 280 தொகுதிகள் அளித்தனர்.  அவர் இந்த ஐந்தாண்டுகளில் தெலுங்கானாவுக்கு என்ன செய்தார்?   ராமர் கோவில் தேவை என யாரும் கேட்கவில்லை.  மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர், சுகாதாரம், ஓய்வூதியம், விவசாய உதவி ஆகியவைகள் தான் தேவை ஆகும்.

மோடி தன்னை சவுக்கிதார் (காவலர்) எனவும் ராகுல் தன்னை தேக்கிதார் (ஒப்பந்தக் காரர்) எனவும் சொல்லிக் கொள்கிறார். மக்களுக்கு சவுக்கிதார் மற்றும் தேக்கிதார் தேவை இல்லை,  இந்த கே சி ஆர் தான் தேவை,     ஆம்.   விரைவில் நான் மத்தியில் முக்கிய பதவியில் அமர்வேன்.   இது நடக்கும்.  ஏனெனில் கூட்டாட்சி அணி பாஜக மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக அமையும்.

அவ்வாறு கூட்டாட்சி அணி வெல்லும் போத மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், மற்றும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் உள்ளிடோர் இந்த அணிக்கு ஆதரவு அளித்து ஆட்சியை கைப்பற்ற உதவுவார்கள்.

மோடி மற்றும் பாஜகவினர் அரசியலுக்காக இந்துத்வாவை உபயோகிக்கின்றனர்.   மற்ற இனத்தவரை தாக்கி இந்துக்கள் வாக்கை பிடிக்க எண்ணுவது அரசியல் இந்துத்வா ஆகும்.   .   அவர்கள் போலி இந்துக்கள்.  நாங்கள் உண்மையான இந்துக்கள்.   எங்களுக்கு பக்தி உள்ளது

வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 150 தொகுதிகள் கூட கிடைக்காது.  காங்கிரசுக்கு 100 தொகுதிகள் கூட கிடைக்காது.   மே மாதம் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மாநிலக் கட்சிகள் மத்தியில் ஆட்சி புரியும்” என தெரிவித்துள்ளார்.