புதுடெல்லி: இந்தியாவுடனான ஏற்றுமதி சார்ந்த ஜி.எஸ்.பி. திட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளும் அமெரிக்காவின் முடிவு, இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதியை பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னுரிமைத் திட்டத்தின் பொதுமைப்பட்ட அமைப்பு என்று விரிவாக அழைக்கப்படும் ஜி.எஸ்.பி. திட்டத்தை தற்போது அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது.
இந்த திட்டம் இருந்தவரை, கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதியில், 30 மில்லியன் அமெரிக்க டாலர் வரை, வரி தள்ளுபடி கிடைத்தது.
ஆனால், தற்போது அந்த திட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதால், பிளாஸ்டிக் கச்சாப் பொருட்கள், நுகர்வோர் மற்றும் வீட்டுப் பயன்பாட்டு சாதனங்கள் மற்றும் பாலியஸ்டர் ஃபிலிம்கள் போன்றவைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி