சிதம்பரம்:
ஆகம முறைப்படி தனது சட்டையை கழற்றிவிட்டு சிதம்பரம் கோவிலுக்குள் சென்ற விசிக தலைவர் திருமாவளவன், அங்கு நடராஜரை சந்தித்ததுடன்,. கோவிலில் பணியாற்றும் தீட்சிதர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைசிறுத்தைகளுக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிகுமாரும் போட்டியிடுகிறார்கள்.
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன், . கடந்த ஒரு வாரமாக சிதம்பரம் நகரில் முகாமிட்டு வாக்குகளை சேகரித்து வருகிறார். அங்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்
இன்று காலை திடீரென சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்ற திருமாவளவன், அங்குள்ள சித்சபைக்குச் சென்றவர், ஆகம முறைப்படி சட்டையை கழற்றி உள்ளே சென்று நடராஜரை தரிசனம் செய்தார். அங்கு தீட்சிதர்கள் கொடுத்த விபூதியை வாங்கி பட்டையடித்துக் கொண்டு, கோவிலில் பணி செய்யும் தீட்சிதர்களை சந்தித்து வாங்கு சேகரித்தார்.
கோவிலுக்குள் வந்த திருமாவை தீட்சிதர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து அங்குள்ள அறை ஒன்றில் உட்கார்ந்து தீர்சிதர்களிடம் உரையாடினார். அப்போது அவர்களிடம் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.