காந்தி நகர்
அமித் ஷா தனது பேத்திக்கு பாஜக தொப்பியை அணிவிக்கும் போது அந்த குழந்தை அதை போட மறுத்து வேறு தொப்பியை அணிந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகிறது.
காந்திநகர் மக்களவை தேர்தலில் வழக்கமாக போட்டியிடும் பாஜக தலைவர் அத்வானி ஓரம் கட்டப்பட்டு தேசியத் தலைவர் அமித்ஷா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமித்ஷா மக்களவை தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். அமித்ஷா தனது வேட்பாளர் மனுவை இன்று தாக்கல் செய்தார்.
அதற்கு முன்பு நடந்த பேரணியில் கலந்துக் கொண்ட அமித்ஷா பேரணி முடிவில் நடந்த வரவேற்பிலும் கலந்துக் கொண்டார். அந்த வரவேற்பில் அவர் குடும்பத்தினரும் கலந்துக் கொண்டனர். அமித்ஷா தனது பேத்தியை தூக்கி வைத்துக் கொண்டு அந்த குழந்தை அணிந்திருந்த சாதாரண தொப்பியை கழற்றி விட்டு பாஜக தொப்பியை மாட்டி விட்டார்.
அந்த குழந்தை தாமரை சின்னம் பொருந்திய அந்த தொப்பியை அணிய மறுத்து விட்டது. மூன்று முறை அமித்ஷா முயற்சித்தும் பாஜக தொப்பியை குழந்தை கழற்றி விட்டது. அதன் பிறகு மீண்டும் சாதாரண தொப்பியை அணிவித்ததும் எதிர்ப்பின்றி அணிந்துக் கொண்டது.
https://twitter.com/SupariMan_/status/1111887290035404801?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1111887290035404801&ref_url=https%3A%2F%2Ftamil.thehindu.com%2Findia%2Farticle26686203.ece
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வைரலாகி உள்ளது. பாஜக எதிர்ப்பாளர்க்ள் பலர் அமித்ஷாவின் பேத்திக்கு கூட பாஜகவின் தொப்பி பிடிக்கவில்லை,அதனால் அந்த குழந்தையும் தேச விரோதியா? என கிண்டல் செய்து வருகின்றனர்.