சென்னை:

கோடநாடு கொலை, கொள்ளை  பற்றி பேசுவதை நிறுத்த முடியாது என்று ஸ்டாலின்  பதில் அளித்து உள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுகுறித்து பேச ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத் தில் முறையிடப்பட்டது. இதையடுத்து நீதி மன்றம், கோடநாடு குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று ஸ்டாலினுக்கு அறிவுரை கூறியது.

தற்போது ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின், அங்கு போட்டியிடும் திமுக கூட்டணி கட்சியான  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதேபோல் பரமக்குடி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் சம்பத் குமாரை ஆதரித்தும் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். பிரசாரத்தின்போது கோடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் மீண்டும் பேசினார்.

தொடர்ந்து பேசியவர்,  திமுக ஆட்சியில் இருந்த போது தான் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.617 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டது. அதன் பல மக்கள் பலன் அடைந்தனர். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட கொடூரங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின் றன. ஆனால் அரசு அமைதியாக இருக்கிறது. 7 ஆண்டாக பொள்ளாச்சி பாலியல் கொடூரம் நடப்பது காவல்துறைக்கு தெரியவில்லையா? பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டம்- ஒழுங்கு நன்றாக உள்ளதாக எடப்பாடி கூற தகுதி யில்லை என்று சாடியவர்,  கொடநாடு கொலைக்கு எதிராக பேச கூடாது என்று நீதிமன்றம் சொல்கிறது. ஆனால் நான் கொடநாடு கொலைகள் பற்றி பேசுவதை நிறுத்தமாட்டேன்.  எனக்கு பயமில்லை… என்றார்.

தமிழக மீனவர்களுக்கு பிரதமர் மோடி எப்போதுமே காவலாளியாக இல்லை. ஆனால்,  ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான முதல்வர் எடப்பாடிக்குத்தான் பிரதமர் மோடி காவலாளி. தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்துக்கு வரும் போது பிரதமர் மோடி, தமது கேள்விகளுக்கு பதில் தர வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.