‘தலைவர் 167’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் ஏப்ரல் 10ம் தேதி தொடங்கவுள்ளது.
இதையொட்டி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பழநி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.