பெங்களூரு
நேற்றைய ஐபிஎல் போட்டி அம்பயர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தலைவர் விராட் கோலி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று நடந்த ஐபில் போட்டியின் 7 ஆம் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அளியும் மும்பை இந்தியன் அணியும் போட்டியிட்டன. இதில் மும்பை அணி முதலில் பேட் செய்து 8 விக்கட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது.
பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. இந்த போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்திருந்தது. அதை ஒட்டி மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்ட்து.
இந்த போட்டியின் கடைசி ஓவரில் மலிங்கா பந்து வீசினார். அப்போது 17 ரன்கள் வெற்றி இலக்குடன் இருந்த பெங்களூரு அணி முதல் பந்தில் சிக்சர் அடித்த போதும் இறுதி பந்தில் 7 ரன்கள் வெற்றி இலக்குடன் இருந்தது. கடைசி பந்தில் ஆர்சிபி அணி 1 ரன் மட்டுமே எடுத்ததால் தோல்வி அடைந்தது. ஆனால் அதன்பிறகு அப்போது மலிங்கா வீசியது நோபால் என தெரிய வந்தது.
இது குறித்து ஆர்சிபி அணி தலைவர் விராட் கோலி, “நாம் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடுகிறோம். கிளப் கிரிக்கெட் இல்லை. இது ஒரு கேலிக்குரிய விவகாரமாகும். அம்பயர்கள் கண்ணை திறந்துக் கொண்டு கவனிக்க வேண்டும். இது கிட்டத்தட்ட ஒரு விளிம்பு நிலை விளையாட்டாகும். எனவே அவர்கள் சிறிது கவனத்துடன் நடந்துக் கொண்டிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.