சென்னை:

திமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ள நிலையில், கூட்டணி வேட்பாளர்களுக்காக பாமக தலைவர் ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஆரணியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு அதிமுக வேட்பாளரை ஆதரித்து, பேசிய ராமதாஸ், எப்போதும்போல, திமுக, அதிமுகவிற்கு மறந்தும் வாக்களித்து விடாதீர்கள் என்று பேசினார்.

வடிவேல் பாணியில் டங் ஸ்லிப்பாகி ராமதாஸ் பேசியது, அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அருகில் இருந்தவர்கள், தவறை சுட்டிக்காட்டியதும்,  சுதாரித்துக்கொண்டவர், ‘திமுக, காங்கிரஸுக்கு மறந்தும் வாக்களிக்காதீர்கள் என்று மாற்றி பேசினார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

பாமக தலைவர் ராமதாஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  பிரச்சாரம்  மேற்கொண்டு வருகிறார். ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்  செஞ்சி வேட்பாளர்,  சேவல் ஏழுமலைக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராமதாஸ், திமுக, காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள் என்பதற்குப் பதிலாக திமுக, அண்ணா திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.