மும்பை: இந்திய சந்தை ஒழுங்குமுறை பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி(Sebi), 12 வலைதளங்களை தடைசெய்து உத்தரவிட்டுள்ளது.
அந்தக் குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனை வலைதளங்கள், தவறான தகவல்களை வழங்கியதால், தாங்கள் முதலீட்டு விஷயத்தில் கோட்டைவிட்டு நட்டமடைந்ததாக பல முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனை வலைதளங்களின் பெயர்களாவன; trade4target.com, niftysureshot.com, mcxbhavishya.com, callput.in, newsbasedtips.com, futuresandoption.com, optiontips.in, commoditytips.in, sharetipslive.com, thepremiumstocks.com, callputoption.in மற்றும் tradingtipscomplaints.com.
‘மேற்கண்ட வலைதள நிறுவனங்கள், மோசடியான முதலீட்டு தகவல்ளை தரும் பணியில் ஈடுபட்டிருந்தன’ என்று செபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி