நாகர்கோவில்:
கன்னியாகுமரி தொகுதியின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எச்.வசந்தகுமார், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்களில் சாமிதரிசனம் செய்தார். பின்னர் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் ராஜன்,ஆஸ்டின்,மனோஜ் தங்கராஜ்,நகர செயலாளர் வக்கீல் மகேஷ்,ஷேக்தாவூத் உள்பட கூட்டணி கட்சியினருடன் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசையை சந்தித்து ஆசிபெற்றார்.
தொடர்ந்து வசந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், . வாழ்த்திய அணைத்து மக்களின் அன்பும் ஆதரவும் மிகுந்த ஊக்கத்தை அளிக்கின்றது என்று கூறினார்.
“ஆயரை சந்தித்து ஆதரவும், ஆசீர்வாதமும் பெற்றேன். கன்னியாகுமரி மாவட்டம் பெருமை வாய்ந்த மாவட்டம். சரக்குப்பெட்டக மாற்றுமுனையம் கொண்டுவந்து மாவட்டத்தை அழிக்கக்கூடாது. “நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதும் சரக்குப்பெட்டக மாற்று முனையத்தை தடுத்து நிறுத்துவதுதான் எனது முதல் பணி” ஒருங்கிணைந்த மீன் பிடித்துறைமுகம் தேவை. அதுதான் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.