பெங்களூரு:

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் சூடு பிடித்துள்ள நிலையில், கர்நாடகாவில், ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகள்  கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதி களும், ஜேடிஎஸ் கட்சிக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த 8 தொகுதிகளில் ஒன்று பெங்களூரு வடக்கு தொகுதி.

கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இந்த நிலையில், தங்கள் கட்சியில் இந்த தொகுதியில் போட்டியிட சரியான வேட்பாளர் இல்லை எனவே, இந்தத் தொகுதியில் நீங்களே வேட்பாளரைத் தேர்வு செய்து போட்டியிடுங்கள் என்று ஜேடிஎஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியிடம் திரும்ப ஒப்படைத்துள்ளது. ஆனால், போட்டியிடும் வேட்பாளர் ஜேடிஎஸ் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் செக் வைத்துள்ளது.

இந்த நிலையில் அந்த தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் பி.எல். ஷங்கருக்கு டிக்கெட் கிடைக்கும் என்று சிலரும், ரோஷன் பைக்கிற்குத்தான் கிடைக்கும் என்று சிலரும் கூறி வருகின்றனர்.