சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 23 நடைபெற்றது.
இவ்விழாவில் நயன்தாரா குறித்து ராதாரவி பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்”. என கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் .
நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய கருத்துகள் சர்ச்சையானதைத் தொடர்ந்து, ராதாரவி மூளையற்றவர் என விக்னேஷ் சிவன் கடுமையாக சாடியுள்ளார். தன் மீதான கவனத்தை ஈர்ப்பதற்காக ராதாரவி இதைச் செய்துகொண்டிருக்கிறார். மூளையற்றவர். அந்த குப்பைக் கருத்தைக் கேட்டு குழுமியிருந்தவர்கள் சிரித்ததும், கைதட்டியதும் கவலையளித்தது.
இத்தகைய நிகழ்ச்சிகள் வேலையற்ற நபர்களுக்கு தங்கள் அறிவற்ற கருத்துகளைச் சொல்ல இடமளிக்கிறது என கடுமையாக சாட்டியுள்ளார் விக்னேஷ் சிவன்