சென்னை:
பாஜக மீண்டும் ஆட்சி வரும் ஆனால், மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறி உள்ளார். இது பாஜக தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்ச்சைக்கு பேர் போனவர் சுப்பிரமணியசாமி. தான் சார்ந்திருக்கும் கட்சியினரைரே குறை கூறி வருபவர். தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று நினைத்துக்கொண்டு அரசியல் செய்பவர். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, 7 பேர் விடுதலை ஒருபோதும் நடக்காது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தான் ஒரு பிராமணர் என்பதால் தன்னால் சவுக்கிதார் ஆக முடியாது என்று கூறியவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருவருக்கும் பொருளாதாரம் குறித்து ஒன்றும் தெரியாது என்று கடுமையாக குறை கூறினார்.
பின்னர், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்று கூறியவர், மோடி பிரதமராவா என்பது கேள்விக்குறியானது என்று கூறி உள்ளார்.
சுப்பிரமணியசாமியின் பேச்சு பாஜக தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.