Tallinn University of Technology in Estonia  மற்றும் University of Lisbon in Portugal  இணைந்து  நடத்திய ஆய்வில் கடலில் உள்ள மீின்கள் மாறிவரும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்வை வெகுவிரைவாக மாற்றியமைத்துக்கொள்கின்றன என்று கண்டறிந்துள்ளனர்.

மேலும் இந்த ஆய்வில் கடலில் எவ்வளவு தடைகள் வந்தாலும் மீன்கள் அதற்கேற்றார்ப்போல் தங்களை மாற்றிக்கொள்கின்றன, அது அம்மீன்கள்  தனியாக இருக்கும்போதோ அல்லது குழுவாக இருந்தாலும் விரைந்து மாற்றிக்கொள்வது மிகுந்த ஆச்சர்யமளிக்கிறது என்றும், மேலும்  பருவநிலை மாற்றததினை முன்பே கண்டறிந்து அதற்கேற்றார்ப்போல் வாழத் தகுந்த இடங்களையும் மீன்கள் அறிந்துகொள்கின்றன.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இம்மீன்கள் வாழ்ந்துவருவதால் இயல்பாகவே இவற்றின் பருவநிலை மாற்றம் குறித்த நுண்ணுர்வுகளை பெற்றிருக்கலாம்  என்றும்,அவற்றின் நுண்ணர்வு கள் எப்படி  மாறிவரும் பருவநிலை மாற்றத்தி்கு ஏற்றார்ப்போல் விரைவாக மாற்றிக்கொள்கிறது எனும் இந்த ஆய்வின் வழியாக பருவ நிலை மாற்றத்தின்போது இயற்கை எப்படி தன்னை மாற்றிக்கொள்கிறது போன்ற தகவல்கள் ஆய்வாளர்களுக்கு மேலும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர்

-செல்வமுரளி