சென்னை:
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்றைய வருமானமான ரூ.2 கோடியை சிஆர்பிஎப் வீரர்களுக்கு சிஎஸ்கே அணி கேப்டன் தோனி வழங்கினார்.
இந்த ஆண்டு ஐபிஎல் திருவிழா வரும் இன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதல் ஆட்டத்தின் டிக்கெட் விற்பனை வருமானம் புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக டிக்கெட் விலை குறைந்த பட்சம் ரூ.1300 முதல் அதிக பட்சமாக ரூ.6500 வரை நிர்ண யிக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் டிக்கெட்டுகள் சில மணி நேரத்தில் வீற்று தீர்ந்தது.
அதன்படி, முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் 7 விக்கெட்வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்று, ஐபிஎஸ் கோப்பைக்கான அச்சாரத்தை போட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து இன்றைய ஆட்டத்தின் டிக்கெட் விற்பனை வருமானமான ரூ.2 கோடி ரூபாக்கான வரைவோலையை, சிஎஸ்அணி கேப்டன், சிஆர்பிஎப் சென்னை மண்டல அதிகாரி யிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது சிஎஸ்கே அணியின் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.